இளம் குடும்பஸ்தர் கொ*லை.!
இரத்தினபுரி, எஹெலியகொட – பொல்வத்தை கடை சந்திப்புக்கு அருகில் நபரொருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் அவிசாவளையைச் சேர்ந்த நுவன் புத்திக ராஜபக்ஷ என்ற திருமணமான 33 வயதான சுரங்கத் தொழிலாளி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெட்டுக் காயங்கள் காரணமாக அதிகளவில் இரத்தம் வெளியேறியுள்ளதுடன், அவரது காலிலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குற்றவாளிகள் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.