உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அருச்சுனா அரசியலை வெளியில் வைக்க வேண்டும் ; விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும். போட்டி அரசியலை பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மதுபானத்துக்காகவும், கொத்து ரொட்டிக்காகவும் தான் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்த கருத்து குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா இந்த பல்கலைக்கழகத்திலேயே கல்வி கற்றவர். ஆகவே மாணவர்கள் அவ்வாறு செய்வார்களா என அருச்சுனா யோசிக்க வேண்டும். தனது தேவைகளுக்காக அவ்வாறு சொல்ல கூடாது.

நான் இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, இங்கேயே நீண்ட காலமாக ஆசிரியராக பணியாற்றுகிறேன். ஆனால் மாணவர்கள் ஒரு சில சிறிய பிழைகள் விடலாம். ஆனால் எமது மாணவர்கள் அவ்வாறு செய்பவர்கள் அல்ல. எமது மக்கள் பிரதிநிதிகளே எமது பல்கலைக்கழகத்தை இழிவுபடுத்துவதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்.

போட்டி அரசியலை நீங்கள் பல்கலைக்கழகத்துடன் செய்யக் கூடாது. அதனை வெளியே செய்யுங்கள். பல்கலைக்கழக மாணவர் சக்தி என்பது ஒரு பயங்கரமான சக்தி. இங்கு 14600 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். அதில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மாணவர்கள். இது மிகப்பெரிய ஒரு சக்தி. இந்த சக்தியுடன் மோதுவதை விட்டுவிட்டு வெளியில் மோதுங்கள்.

பல்கலைக்கழக மாணவர்கள் உண்மையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் இவ்வாறான போராட்டங்களில் முன்னின்று செயற்படுகின்றார்கள். வெளியில் இருக்கின்ற பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்களின் சக்தியை பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0