முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!
பரந்தாமன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு – கற்சிலை மடுவில் நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஈகை சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்தூவி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சமைத்து வழங்கப்பட்டது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




