உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; படுகொ*லை செய்யப்பட்டோருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று, யாழ். தீவகம் அல்லைப்பிட்டியில் படுகொ*லை செய்யப்பட்டவர்களின் நினைவு நாளும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத் தந்தையினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அல்லைப்பிட்டி சேமக்காலையில் அமைந்துள்ள படுகொ*லை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில், உறவினர்களால் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.2006ஆம் ஆண்டு அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவுகளையும் இதன்போது உறவினர்கள் பகிர்ந்துகொண்டனர்.

இறுதி யுத்தத்தின்போது மக்கள் எதிர்கொண்ட சொல்லொணாத் துயரங்களையும், பட்டினியையும் நினைவுகூரும் வகையில், காய்ச்சப்பட்ட ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ சிரட்டைகளில் வழங்கப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கஞ்சியைப் பருகி, அந்த வரலாற்று அவலத்தைத் தமக்குள் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அல்லைப்பிட்டி படுகொ*லையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தீவகம் நினைவேந்தல் குழுவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

35 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

68 0 0