உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நில உரிமை தொடர்பான கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
66 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினரின் ஏற்பாட்டில் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நில உரிமை தொடர்பான ஒருங்கிணைந்த கள விஜயமும் ஒன்றிணைவு கலந்துரையாடலும் இன்று (13.05.2026) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புகள், நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நில உரிமைக்காக செயற்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டதுடன், முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு, கொக்குத்தொடுவாய், வாட்டுவாகல் மற்றும் வற்றாப்பளை பகுதிகளைச் சேர்ந்த காணி உரிமை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்திருந்தனர்.

இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் நில மீட்பிற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மேலும், முல்லைத்தீவு மக்களினால் தங்களது ஆதரவும் ஒற்றுமையும் வெளிப்படுத்தப்பட்டது.

கலந்துரையாடலின் போது குருந்தூர் மலை விவகாரம், கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் இடம்பெற்று வரும் நில அபகரிப்புகள், கேப்பாப்பிலவு மக்களின் காணி மீட்பு போராட்டம், வாட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

அத்துடன், இனிவரும் காலங்களில் நில மீட்பிற்காக வடகிழக்கை இணைக்கும் செயலணியாக ஒருங்கிணைந்து செயற்படுவது தொடர்பிலும் முக்கிய தீர்மானங்கள் மற்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0