உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்; முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம் தாஹீர், எம்.எஸ் உதுமாலெப்பை, கே.கோடிஸ்வரன், எம்.எஸ் வாஸீத் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாஸீர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றுப் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராய்ந்தனர்.

இக்கூட்டத்தில், பிரஜா சக்தி கிராம மட்ட செயற்திட்டங்களுக்கான அங்கீகாரம், அங்காடி வியாபாரிகளுக்கான வியாபார அனுமதி, பஸ் டிப்போ அபிவிருத்தி மற்றும் விளினையடி வீதிச் சமிக்ஞை நிறுவுதல் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, வளத்தாப்பிட்டி குளத்தின் மேற்குப் பக்கமாக யானை வேலி அமைத்தல், சம்மாந்துறை MPCS-க்கு சொந்தமான SP/16 கிளைக் காணியினை மின்சார சபைக்கு வழங்கும் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம் ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும், செந்நெல் கிராமம் மற்றும் மல்வத்தை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகள், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பாடத்தினை ஆரம்பிப்பது, வீரமுனை இந்து மயானப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் சம்மாந்துறை கல்வி வலய பாடசாலைகளின் பௌதீகத் தேவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், நீர்ப்பாசனப் பிரச்சினைகள், புனரமைக்கப்படாமல் உள்ள வீதிகள் மற்றும் விவசாயக் காணி தொடர்பான முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை எட்டுவது எனப் பல முக்கிய தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

35 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

68 0 0