உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழ். திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்துக்குள் புத்தசாசன அமைச்சும் நுழைவு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
40 பார்வைகள்

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையம் 2022.02.21 அன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தைப் பேணிச் செல்வதற்காகக் புரிந்துணர்வு எட்டப்பட்டது.

ஒப்பந்ததத்தின்படி, குறித்த கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுப்பதற்கு ஒருங்கிணைந்த முகாமைத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இவ் ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய கருத்திட்ட நிர்மாணம் பூர்த்தியடைந்த பின்னர், இக்கலாச்சார மத்திய நிலையம் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக யாழ் மாநகர சபைக்குப் பாரப்படுத்தல் வேண்டும்.

அவ்வாறு பாரப்படுத்தப்பட்ட பின்னர், முகாமைத்துவப் பணிகளை மேற்கொள்வதற்காக நம்பிக்கைப் பொறுப்பு நிதியமொன்றை ஸ்தாபிப்பதற்கு குறித்த தரப்பினர்கள் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்புறுதி வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கான நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தைத் ஸ்தாபிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் மூலம் இதுவரை காலமும் அரசாங்கத்தின் பிடிக்குள் தப்பி இருந்த யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையம் நம்பிக்கை நிதியம் என்ற போர்வையில் புத்த சாசன அமைச்சின் கண்காணிப்புக்குள் அகப்படும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

35 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

68 0 0