உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருளுடன் இந்திய தொழிலதிபர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சட்டவிரோதமாக “குஷ்” ரக போதைப்பொருளை நாட்டிற்கு கடத்தி வந்த வெளிநாட்டு பயணி ஒருவர், இன்று புதன்கிழமை(13) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 29 வயதுடைய இந்திய நாட்டு தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இன்று அதிகாலை 12:30 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து ‘தாய் ஏர்வேஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

தான் கொண்டு வந்த பொருட்களில் எவ்விதமான வரி செலுத்த வேண்டிய பொருட்களும் இல்லை எனக் கூறி, வெளியேற முயன்ற போதே இவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சந்தேகநபர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளையும் சோதனை செய்த போது, அவற்றில் 4 பொதிகளாக பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 389 கிராம் எடையுள்ள சுமார் 4 கோடியே 38 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான “குஷ்” ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0