உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சட்டத்துக்கு எவரும் மேலானவர்கள் அல்லர்; வாக்குமூலம் அளிப்பது ஒன்றும் பேரழிவல்ல.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நாட்டின் சட்டத்துக்கு அனைவரும் சமமானவர்கள் என்றும், தத்தமது பதவிகளைப் பொருட்படுத்தாது ஒவ்வொருவரும் சட்டத்துக்குத் தலைவணங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று ஆற்றிய உரையின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

எந்தவொரு சமூக அந்தஸ்தையும் பாராது, தவறு செய்பவர்களுக்கு எதிராகச் சட்டம் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி உறுதிபடத் தெரிவித்தார்.

அதிகாரம் மற்றும் அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் சட்டம் வளைக்கப்படாத ஒரு புதிய கலாசாரத்தை அரசு உருவாக்கி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விசாரணைகள் குறித்துப் பேசிய ஜனாதிபதி, “ஏதாவது ஒரு விசாரணையில் ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டால், அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவது கட்டாயமான நடைமுறையாகும்” என்றார்.

வாக்குமூலம் வழங்குவதை ஒரு பெரும் பேரழிவாகச் சித்தரிக்கும் பழைய கலாச்சாரம் இனி நாட்டுக்குத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் போது, தம்மைச் சட்டத்துக்கு மேலானவர்கள் என இதுவரை கருதி வந்தவர்களால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் ஜனாதிபதி விமர்சித்தார்.

ஒரு நாகரிகமான நாட்டை உருவாக்க அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்படும் சமூகம் அவசியம் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் அனர்த்த நிவாரணப் பணிகளை மீளாய்வு செய்வதற்காகச் சென்றிருந்த போதே, நாட்டின் நீதித்துறை நடைமுறைகள் குறித்த தனது அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி இவ்வாறு வெளிப்படுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0