உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கபில சந்திரசேன பிணை விவகாரம்; கூலிக்கு ஆள் பிடித்த தரகர் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை வழங்குவதற்காகக் கூலிக்கு ஆட்களை அமர்த்திய குற்றச்சாட்டில் 74 வயதுடைய தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

விமானக் கொள்வனவின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட கபில சந்திரசேன, கடந்த 5ஆம் திகதி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகள் அவருக்கு நிபந்தனையாக விதிக்கப்பட்டிருந்தன.

கபில சந்திரசேன விடுதலையான பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளுக்காக, தலா 15 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டு இருவர் பிணையாளர்களாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கூலிக்கு ஆட்களை அமர்த்திய தரகர் நீண்டகாலமாக நீதிமன்ற வளாகங்களில் இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த இரு சந்தேகநபர்களும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் வசிக்கும் 74 வயதுடைய மேற்படி தரகரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0