உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வட்டிக்குப் பணம் கொடுப்பவரே சுட்டுக் கொ*லை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

காலி, தங்கேதர பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி – தடேல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலி, தங்கேதர பகுதியில் கார் ஒன்றில் வருகை தந்திருந்த அடையாளம் தெரியாத சந்தேகநபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிதாரிகள், வீதியிலிருந்த நபர் மீது இலக்கு வைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று காலி பொலிஸார் தெரிவித்தனர்.

காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கேதர, டிக்சன் சந்தி பகுதியில் நேற்றுக் காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாகக் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

44 வயதுடைய காலி, தங்கேதர பகுதியைச் சேர்ந்த நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

மேற்படி நபர் வட்டிக்குப் பணம் வழங்குபவர் எனவும், நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தப் படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், உயிரிழந்த நபர் ஏற்கனவே தனக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

நேற்று சம்பவ இடத்துக்குக் காலி நீதிவான் விஜயம் செய்து நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி – தடேல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்துப் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து குறித்த கார் தொடர்பில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

மேலும் தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளில் காலி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0