உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தையிட்டி விகாரைப் பகுதியைப் பார்வையிட்ட யாழ். ஆயர்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரைப் பகுதியை, யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.

தையிட்டியில் பொதுமக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, நிலத்தின் உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விகாரையை அகற்றித் தங்களது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என்பதே இவர்களது பிரதான கோரிக்கையாக உள்ளது.

நிலத்தை விடுவிப்பதற்கான முதற்கட்டமாக காணி அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க மாவட்ட நிர்வாகம் பலமுறை முயற்சித்தது. எனினும், அதிகாரிகளின் செயற்பாடுகளில் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்து நில உரிமையாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டதால், அளவீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழலே காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு இழுபறி நிலைக்கு மத்தியில், தையிட்டிப் பகுதிக்கு நேற்று மாலை விஜயம் செய்த யாழ். ஆயர், விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் மக்களின் காணிகளை நேரில் பார்வையிட்டார். மக்களின் நீண்டகாலப் போராட்டம் மற்றும் தற்போதைய கள நிலவரங்கள் குறித்து இதன்போது அவர் கேட்டறிந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0