உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (Tô Lâm) உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று மே 07 ஆம் திகதி இலங்கை வருகிறார்.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 55வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்ட வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடர்ந்து, அவரது அழைப்பின் பேரில் இவ்விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டு நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது, இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்கள்.

வியட்நாம் ஜனாதிபதி, “இலங்கை – வியட்நாம் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை மன்றத்தின்” தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

ஜனாதிபதி டோ லாமுடன், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் இவ்விஜயத்தில் இணைந்து கொள்வார்கள் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0