உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

‘நாம் நீலகாமம்’ பிரகடனம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு ; தோட்டப் பகுதிகளுக்குக் கூலிப்படை வேண்டாம் என்றும் வலியுறுத்து!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

‘நாம் நீலகாமம்’ பிரகடனத்தைத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று சபையில் சமர்ப்பித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு சமர்ப்பித்தார். நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவத்துக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்தியும் கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் நேற்று அறவழிப்  போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே இன்று பிரகடனம் அதிஉயர் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

“இராணுவத்தில் இருந்து விலகியவர்களைக் கொண்டு பெருந்தோட்டப் பகுதிகளில் கூலிப்படையை உருவாக்க முடியாது. அது தடை செய்யப்பட வேண்டும். தோட்டங்களில் பயிரிடப்படாத தரிசு நிலங்களில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்” என்றும் மனோ கணேசன் வலியுறுத்தினார்.

மலையக மக்களுக்காக தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட ஹட்டன் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுமாறும் அவர் இடித்துரைத்தார்.

மலையக மக்களுக்குக் காணி உரிமை தராமல், ஏனையோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமானால் தமிழ் முற்போக்குக் கூட்டணி நிச்சயம் போராடும் என்றும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0