உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரசு மீது பழியைப் போடாதீர்கள்! பொய்யுரைப்பதை நிறுத்துங்கள்!!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

“நீலகாமம் பிரச்சினையைத் தேசிய மக்கள் சக்தி அரசு எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்குப் புரிகின்றது. எனவே, தவறான தகவல்களை மக்கள் மயப்படுத்த வேண்டாம்.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியிடம் வலியுறுத்தினார் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா. ‘நாம் நீலகாமம்’ பிரகடனத்தை மனோ கணேசன் இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றி இருந்தார்.

அவரின் உரையின் பிறகு கருத்து வெளியிடுகையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நீலகாமம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் சபையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அரசே  முன்னின்று, அரசின் அனுமதியுடனேயே இது (தாக்குதல்) நடத்தப்பட்டது என்பதையே அவர் (மனோ கணேசன்) கூற முற்படுகின்றார். ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரியும். தேசிய மக்கள் சக்தி அரசு இந்தப் பிரச்சினையை எவ்வாறு அணுகுகின்றது என்பதும் மக்களுக்குத் தெரியும்.

போலியான தகவல்களை மக்கள் மயப்படுத்துவதை நிறுத்துங்கள். உங்களது அரசுதான் (ஐ.தே.க.) 1983 களில் தோட்டங்களை எரித்தது. கைதுகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும் குறைகூறவே இவர்கள் (எதிரணி) முயற்சிக்கின்றனர்.  

மலையகத்தில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. மே தினத்தைக்கூட ஒழுங்காகச் செய்ய முடியாத அந்த நபர்களுக்கு (மலையக கட்சிகள்) அரசை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை.” – என்றார் பிரதி அமைச்சர். இதன்போது கருத்து வெளியிட்ட மனோ கணேசன் எம்.பி.,

“பிரதி அமைச்சர் இங்கு பொய்யுரைக்கின்றார். மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் அரசைத் தொடர்பு படுத்தவே இல்லை. அவர் தாமாகுவே தொப்பியைப் போட்டுக்கொள்கின்றார். விசர்த்தனமாக கதைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0