உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மகளை துஷ் – பிரயோகம் செய்த கள்ளக்காதலன்; தாய்க்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

தனது கள்ளக்காதலன் மகளை துஷ்பிரயோகம் செய்தமையை மறைத்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட தாய், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், தாயின் கள்ளக்காதலனால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது குறித்து பதவிய பகுதி குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் துஷ்பிரயோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஒருவரே இக்குற்றத்தைச் செய்துள்ளதாகவும், அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து உறவினர்களும் கிராம மக்களும் பொலிஸாருக்குத் தகவல்களை வழங்கியுள்ளனர்.

சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், அவர் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறைத்து, அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் குறித்த தாயைப் பதவிய பொலிஸார் கைது செய்தனர்.

நேற்று (05) கெபித்திகொல்லேவ நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்ற பின்னர், தற்போது பதவிய பொலிஸாரின் பொறுப்பில் உள்ளார். சிறுமியின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0