உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மலையக மக்களின் நில உரிமையை உறுதிப்படுத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை – நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மலையக மக்களுக்கு உடனடியாக நில உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நீலகாமம் தோட்டத்தில் கூலிக்காக அமர்த்தப்பட்ட காடையர்களால் தொழிலாளி ஒருவரின் குடியிருப்பு ஈவிரக்கமின்றி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இக்கொடூரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்றார்.

மலையக மக்களின் தற்போதைய அவலநிலை குறித்துப் பேசிய அவர், 200 வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மக்களுக்கு இன்றும் சொந்த நிலம் இல்லை என்பதை இந்தச் சம்பவம் உலகுக்குக் காட்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

“ஒரு சிறு நிலத்தில் குடிசையொன்றை அமைப்பதற்குக் கூட மலையக மக்களுக்கு உரிமை இல்லை என்பது வேதனையானது.

மனித முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிப் பேசும் இந்த அரசு, அந்த மக்கள் தமக்கென ஒரு சொந்த நிலத்தைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்குரிய வழியை இந்தத் தடவையாவது ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நீலகாமம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கப்பெற வேண்டும். மலையக நில உரிமை விவகாரத்தில் அரசு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றும் சிறீதரன் எம்.பி. இதன்போது உரத்த குரலில் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

51 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0