உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் என்புக்கூட்டுத் தொகுதி மீட்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் இரு என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபாரணம் என சந்தேகிக்கப்பட்ட ஆபாரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 8ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் 05 ஆம் திகதி நடைபெற்றது.

அதன்போது 5 என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் குழந்தை ஒன்றின் என்பு கூட்டு தொகுதி உட்பட 2 என்பு கூட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 255 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 249 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மண்ணிற்குள் இருந்து எரிந்த நிலையில் சில என்புகளும், நாணய குற்றிகளும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் மூக்குத்தி போன்றதான உடைந்த நிலையிலும், சிறிய தங்க ஆபாரணம் ஒன்றும், சில நாணய குற்றிகளும், மரப்பெட்டி ஒன்றின் சிதைவுகள், ஆணிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையின் என்பு கூட்டு தொகுதி நேரடியாக மண்ணில் இருந்து அகழ்ந்து எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டமையால், அதனை பண்டேஜ் துணிகளால் சுற்றி பக்குவப்படுத்த மண்ணுடன் அகழ்ந்து எடுக்கப்படதாக சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

34 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0