உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வடமராட்சியில் வீடு புகுந்து தாக்குதல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்று முன்தினம் (03) நள்ளிரவு வீடு புகுந்து மோசமான தாக்குதலை இருவர் முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து நள்ளிரவு குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த இருவர் மிக மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீதும் மோசமான தாக்குதலை மேற்கொண்டதால் அவர் உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி ஓடியுள்ளார்.

மகனை அழைத்து வருமாறு கூறி மிக மோசமான தாக்குதலை வீட்டின் உடைமைகள் மீது மேற்கொண்டதுடன் அருகில் உள்ள வீட்டையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பஸ்தரால் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ள மருதங்கேணி பொலிசார் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0