உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த பல்பொருள் அங்காடி நிலையத்திற்கு அபராதம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி நிலையத்திற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (05) 05 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அறிவிப்பின் படி, ஒரு கிலோகிராம் உள்ளூர் நாட்டரிசியின் நிர்ணயிக்கப்பட்ட விலை 230 ரூபாவாகும். இருப்பினும், குறித்த விற்பனை நிலையம் அதனை 320 ரூபாவிற்கு விற்பனை செய்து, ஒரு கிலோவிற்கு 90 ரூபாய் மேலதிகமாக அறவிட்டுள்ளமை சோதனையின் போது கண்டறியப்பட்டது.

அரிசி விலையை அதிகரித்து நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இந்த சம்பவம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது, அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்க்குமாறும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக ஒருபோதும் செலுத்த வேண்டாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

விலை மோசடி தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க விரும்புவோர், 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் அவசர இலக்கத்திற்குத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0