உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நீதித்துறையின் சுதந்திரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

அரசின் தற்போதைய செயற்பாடுகள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டிலான் பெரேரா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மஹரகமவில் ஆற்றிய உரையின் காணொளித் துண்டொன்று ஊடகங்களுக்குக் காண்பிக்கப்பட்டது. அதில், மே மாத காலப்பகுதிக்குள் 15 முக்கிய வழக்குகள் (10 ஊழல் மற்றும் 5 குற்றவியல் வழக்குகள்) விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அதற்கான தீர்ப்புகள் விரைவில் வெளிவரும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

ஜி.எல். பீரிஸ்
இது குறித்துக் கடும் அதிருப்தியை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பின்வருமாறு தெரிவித்தார்.

“நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தீர்ப்புகள் எப்போது வரும் என்பதை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முன்கூட்டியே அறிவிப்பது நீதித்துறையின் கௌரவத்தைப் பாதிக்கும்.

அரசியல் தேவைகளுக்காக நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதும், தீர்ப்புகள் குறித்து முன்னறிவிப்பு செய்வதும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளுக்கு முரணானது.” – என்றார்.

டிலான் பெரேரா
முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா உரையாற்றுகையில், “சட்டத்தின் ஆட்சி என்பது தனிப்பட்ட பழிவாங்கல்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது” என்று வலியுறுத்தினார். முறையான விசாரணைகளின்றி அரசியல் எதிரிகளை இலக்கு வைப்பதை அரசு தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மஹிந்த அமரவீர
முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.” – என்றார்.

ஊழல் ஒழிப்பு விசாரணைகளை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அவை அரசியல் மேடைகளுக்காக நீதித்துறையை வழிநடத்தும் முயற்சியாக இருக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தை அதன் போக்கில் விடுவிக்க வேண்டுமே தவிர, அரசியல் இலாபங்களுக்காக நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதாகக் காட்டிக்கொள்ளக் கூடாது என்றும் இந்த ஊடக சந்திப்பில் ஒருமித்த குரலில் வலியுறுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0