உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ரங்க நிஷாந்தவின் உயிரிழப்பில் மர்மம்: புதிய விசாரணைக்கு கம்மன்பில வலியுறுத்து.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் மற்றும் அது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை என்பன பாரிய சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன என்று பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

ரங்க நிஷாந்தவின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என மருத்துவக் குழு முடிவெடுத்துள்ள போதிலும், அது ஒரு முழுமையான பரிசோதனை அல்ல என்றும் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“திசுக்கயியல் மற்றும் நச்சியியல் பரிசோதனைகளின் முடிவுகள் வருவதற்கு முன்னரே தற்கொலை என முடிவெடுத்தது ஏன்?

கத்தியில் இருந்த கைரேகைகள் மற்றும் ஆடைகளில் இருந்த இரத்தக் கரைகள் ரங்க நிஷாந்தவுக்கு உரியவைதானா என்பது உறுதிப்படுத்தப்பட்டதா?

சம்பவம் நடந்த ஆரம்பத்திலேயே இது தற்கொலை எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்த நிலையில், மருத்துவக் குழுவினர் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகினார்களா?

மருத்துவக் குழுவில் அரசின் ஆதரவாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. எனவே சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மூவர் அடங்கிய புதிய சுயாதீனக் குழுவொன்றின் ஊடாக மீளவும் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.” – என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் அண்மைக்காலமாக வெளிநாட்டு கணினி குற்றவாளிகள் அதிகளவில் கைது செய்யப்படுகின்றமை குறித்தும் இதன்போது அவர் கவலை வெளியிட்டார்.

“கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கணினி குற்றவாளிகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து 210 ஆக இருந்த கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள், 2025 ஆம் ஆண்டில் 12 ஆயிரத்து 650 ஆகப் பாரியளவில் அதிகரித்துள்ளன.

இலங்கை இவ்வாறான சர்வதேச குற்றவாளிகளின் புகலிடமாக மாறி வருவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.” – என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0