உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழாவினைத் தொடர்ந்து, சுற்றுலா, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விளையாட்டு, இளைஞர் மேம்பாடு, ஆவணக்காப்பகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் இன்று மே 4 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்களும் தங்களது கலந்துரையாடல்களின் முடிவுகளை எடுத்துரைக்கும் ஒரு கூட்டு ஊடக அறிக்கையை வெளியிட்டனர்.

அதில், இலங்கைக்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கும், அண்மைக்கால பேரிடர் காலங்களில் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க இதன்போது மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸுக்கு நன்றியை தெரிவித்தார்.

உலகளாவிய பருவநிலை மாற்றத்தை ஒரு பொதுவான சவாலாக எடுத்துரைத்த ஜனாதிபதி அநுரகுமார, உயர்ந்து வரும் கடல் மட்டமும் அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையும் இரு நாடுகளுக்கும் அவசரமான மற்றும் பிரதானமான கவலைகள் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையில், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மீன்வளம், வேளாண் பதப்படுத்துதல், சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு மாலைத்தீவுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி முய்ஸு, எதிர்வரும் மே 6 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.

2023 இல் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0