உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

காணி உரிமை கோரி கொழும்பில் நாளை அறவழிப் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை – அடக்குமுறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் கொழும்பில் நாளை செவ்வாய்க்கிழமை “நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டம் இடம்பெறுகின்றது.

கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் முற்பகல் 11.01 மணிக்கு குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகும் என ஏற்பாட்டுக்குழுவான “நாம் மலையகம்” அமைப்பு அறிவித்துள்ளது.

மலையக சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், வர்த்தக சங்கங்கள், ஊடக அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் எனப் பல தரப்பினரும் மேற்படி அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நீலகாமம் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தொழிலாளர் குடியிருப்பொன்றைப் பிரத்தியேகப் பாதுகாப்பு படையைக்கொண்ட தோட்ட நிர்வாகம் அண்மையில் அடித்து நொறுக்கியது. இச்சம்பவம் ஒட்டுமொத்த மலையகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கறுப்பு ஆடை அணிந்துகொண்டு, முகத்தைமூடும் வகையிலான தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டு தோட்டத்துக்குள் புகுந்த கும்பல், வன்முறையைக் கையாண்டே வீட்டை அடித்து நொறுக்கியது.

நாட்டில் சட்டம், ஒருங்கை கையாள்வதற்கு காவல்துறை இருக்கையில், தண்டனை வழங்க நீதிமன்றம் செயற்படுகையில் பிரத்தியேக பாதுகாப்பு குழு, சட்டம், ஒழுங்கை கையில் எடுத்தமை அடக்குமுறையின் உச்ச கட்டம், ஜனநாயக விரோதச் செயல் எனப் பலரும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் நீலகாமம் வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் நாம் மலையகம் அமைப்பின் ஏற்பாட்டில் நீலகாமம் தோட்டத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது “நீலகாமம்” பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையின் முக்கிய அங்கமான காணி உரிமையை வென்றெடுக்கும் நோக்கிலும், நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், பெருந்தோட்டப் பகுதிகளுக்கு கூலிப்படை வேண்டாம் என வலியுறுத்தியும் கொழும்பில் அறவழிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0