போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது.!
காலி – அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலப்பிட்டிய பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பு பிஸ்டல் ரக கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஹுங்கல்ல பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டுத் தயாரிப்பு பிஸ்டல் ரக கைத்துப்பாக்கி ஒன்று, அதன் மகசின் ஒன்று, 16 தோட்டாக்கள் மற்றும் 11 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கியை சில நாட்களுக்கு முன்னர் சந்தேகநபருக்கு வழங்கியதாகக் கூறப்படும் மற்றொருவர் நேற்று இரவு அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் வாதுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர்கள் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருபவர்கள் என்பதும், ஏதேனும் குற்றச் செயலைச் புரிவதற்காக இவர்களுக்கு இந்தப் துப்பாக்கி வழங்கப்பட்டிருப்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.