உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 77 பேர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஏப்ரல் 17ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இதன்போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 77 நபர்கள், வணிக வெடிபொருட்களுடன் கூடிய 17 டிங்கிகள் மற்றும் 06 டிராக்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருகோணமலை, கந்தளாய், வாழைச்சேனை, கல்லராவ, கிண்ணியா, துடுவ, காயங்கேணி, போல்ட் பொயின்ட், சாம்பூர், சிலாவத்தை, இறக்கக்கண்டி, முகத்துவாரம், பனிச்சங்கேணி, நந்திக்கடல் களப்பு, யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணி, பருத்தித்துறை, மன்னார் சவாரிபுரம் ஆகிய கரையோரங்களையும் கடற்பரப்புகளையும் உள்ளடக்கியதாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படைக் கட்டளைகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், டிராக்டர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோகிலாய், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வாழைச்சேனை, குச்சவெளி, சிலாவத்துறை மற்றும் கிண்ணியாவில் உள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

4 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0