உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தையிட்டி பிரதேசக் காணி விடுவிப்பை சிலர் அரசியல் ரீதியாகக் குழப்புகின்றனர்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

“எங்களுடைய அரசாங்கம் அந்த மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான வெற்றித் தருவாயில் இருக்கும் போது சிலர் அதனை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி குழப்புகின்றனர். தையிட்டி விகாரைப் பிரச்சினையை நிதானமாகவே கையாள வேண்டும். தென்பகுதியில் இருக்கும் இனவாத அரசியல்வாதிகளுக்கு புது இரத்தத்தை பாய்ச்சுவதாக இந்தப் பிரச்சினை அமைந்து விடக்கூடாது.”- என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.

தையிட்டி பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சூழவுள்ள காணிகளை விடுவிக்கும் முகமாக மூன்று அமைச்சர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் எமது அரசாங்கத்தால் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டன. அன்றைய தினம் மக்களுக்கு இருந்த சந்தேகங்கள் காரணமாக காணிகளை அளவீடு செய்ய முடியாமல் போனது. ஆனாலும் அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் மக்களுக்கு மீள நம்பிக்கையளித்து மீளக் காணிகளை அளப்பதற்கான முழு ஏற்பாடுகளையும் கடந்த வாரம் மேற்கொண்டிருந்தனர். எனினும் அது தடைப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரை பிரச்சினையானது எங்களுடைய ஆட்சிக் காலத்தில் உருவான பிரச்சனையல்ல. முன்னைய ஆட்சியாளர்களுடைய காலத்தில் பொது மக்களுடைய காணியில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. எங்களுடைய அரசாங்கம் அந்த மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான வெற்றித் தருவாயில் இருக்கும் போது சிலர் அதனை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி குழப்புகின்றனர்.

தையிட்டி விகாரைப் பிரச்சினையை நிதானமாகவே கையாள வேண்டும். தென்பகுதியில் இருக்கும் இனவாத அரசியல்வாதிகளுக்கு புது இரத்தத்தை பாய்ச்சுவதாக இந்தப் பிரச்சினை அமைந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆனால் தையிட்டி விகாரை பிரச்சினையை வைத்து தென்னிலங்கையில் உள்ள இனவாதிகளை மீளவும் இயங்கு நிலைக்கு கொண்டுவர இங்கிருக்கும் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது.

தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சூழ உள்ள காணிகளை நில அளவை செய்து மக்களிடம் ஒப்படைப்பதற்கே நாங்கள் தீர்மானித்துள்ளோம். சுவீகரிக்கும் நோக்கத்தோடு நாங்கள் நில அளவைகளை மேற்கொள்ளவில்லை. சுவீகரிக்கும் நோக்கத்தோடு நாங்கள் செயற்படுவோமாக இருந்தால் தமிழ் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழப்பார்கள்.

சிலர் தங்களுடைய அரசியலுக்காக இந்த விகாரைப் பிரச்சினையை தீராத ஒரு பிரச்சினையாக வைத்திருப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இதுவே நிதர்சனமான உண்மை.

காணி உரிமையாளர்கள் ஒரு கடிதத் தலைப்பில் அனைத்து அரச அதிகாரிகளும் கையெழுத்திடுமாறு கோருகின்றார்கள். ஆனால் நடைமுறைப்படி அரச உத்தியோகத்தர்கள் அவ்வாறு ஒரு கடிதத் தலைப்பில் கையெழுத்திட முடியாது. எனினும் அரச உத்தியோகத்தர்கள் ஒரு கடிதத்திலே தங்களுடைய கையொப்பத்தினை இட்டு பிரதேச செயலாளருடைய உத்தியோகபூர்வ முத்திரையையும் பதித்து காணி உரிமையார்களிடம் வழங்கியிருந்தார்கள். ஆனால் அதனை காணி உரிமையாளர்கள் நம்பவில்லை. எழுத்து மூல கடிதத்தை விட நம்பிக்கையே பலமானது.

காணிகளை அளந்து சுவீகரித்து விகாரைக்கு வழங்குவோமாக இருந்தால் எங்களுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ் மக்களுமே போராடுவார்கள் என எங்களுக்கு தெரியும். விகாரை அமைக்கப்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய காணிகள் அனைத்தையும் மக்களுக்கு மீள ஒப்படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் பவானி வீதி காணப்படுகின்றது. அதனை விடுவிக்கும் முகமாக காணிகளை அளவீடு செய்த குழுவினர் குறித்த வீதியையும் அளவீடு செய்து இருந்தார்கள். இதனை முன்கூட்டியே அறிந்த அரசியல்வாதிகள் சிலர் குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பவானி வீதியைத் துரிதமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை வரும் நாட்களில் மேற்கொள்வோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

34 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

28 0 0