உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

‘கம்பன் புகழ்’ விருது பெற்ற ஜனாதிபதி அநுர.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

அகில இலங்கை கம்பன் கழகத்தினர் 2026ஆம் ஆண்டுக்கான ‘கம்பன் புகழ்’ விருதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கிக் கௌரவித்தனர்.

இன வேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக உறுதியளித்து, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று, சிறுபான்மைச் சமூகங்களையும் ஆதரித்து, நாட்டை நிர்வகித்து வரும் அநுரகுமார திஸாநாயக்கவைப் பாராட்டும் வகையில் அவருக்கு இந்தக் கௌரவத்தைக் கம்பன் கழகத்தினர் அளித்துள்ளனர்.

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா – 2026இன் இறுதி நாள் வைபவம் கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வை தொழிலதிபர் என்.எஸ்.வாசு மங்கல விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது நீதியரசர் பா.சசி மகேந்திரன் தலைமையுரையையும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த டாக்டர் முஹமட் ரேலா தொடக்கவுரையும் ஆற்றினர்.

இந்நிகழ்வில் கம்பன் கழகம் ஆறு சான்றோர்களுக்கு விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, தொழிலதிபர் சி.தனபாலா, சிரேஷ்ட பொறியியலாளர் சி.உருத்திரலிங்கம், சுற்றுலா அமைச்சின் முன்னாள் நிரந்தர செயலாளர் டாக்டர் பிரதாப் இராமானுஜம், வைத்தியர் ‘காப்பியக்கோ’ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சான்றோர் விருது பெறவேண்டிய முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நிகழ்வுக்கு வருகை தராததால் அவருக்கான விருதை அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க விழா மேடையில் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அகில இலங்கை கம்பன் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் உயரிய விருதான ‘கம்பன் புகழ்’ விருதை இவ்வாண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு “வரலாற்றை மாற்றியவன்!” என்ற புகழாரத்தோடு கழகத்தினர் வழங்கிக் கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத்தின் முன்னாள் தலைவர் கு.அண்ணாமலையும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

3 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0