உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கோர விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

வெல்லவாய, மகாஆரகம – சிறிபுர பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் மகாஆரகம, சிறிபுர பகுதியை சேர்ந்த, புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயதுடைய ஆர்.எம். சதிதி நிபுணிகா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி தனது தந்தையுடன் உந்துருளியில் வெஹெரயாய கங்காராம விகாரையிலுள்ள தஹம் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வெல்லவாய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த தந்தையும் மகளும் ஹந்தபானாகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவியின் மரணம் தொடர்பான மரணப் பரிசோதனைகள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

33 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0