உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கை வந்தடைந்தார் ரஷ்ய சுகாதார அமைச்சர்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான குழுவினர் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர்.

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து புறப்பட்ட ஏரோபுளோட் நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்.யு. 288 என்ற விமானம் மூலம், காலை 10.20 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர் முனையத்தில் வைத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகரியன் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் ரஷ்ய தூதுக்குழுவினரை உற்சாகமாக வரவேற்றனர்.

இந்த விஜயத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

அத்துடன், தனது பயணத்தின் ஒரு பகுதியாக கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடம் ஆகியவற்றுக்கும் அவர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0