உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநாகல் – புத்தளம் வீதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் கார் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யக்வில பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குருநாகல் நகருக்கு அருகில் புத்தளம் வீதியில் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பம் மற்றும் தொலைபேசி கம்பம் என்பவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபொக்குண பகுதியில் சனிக்கிழமை (02) காலை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிரிமெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து வாரியப்பொல நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து ஒன்று, எதிரே வந்த உந்துருளியுடன் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மற்றுமொரு உந்துருளி மற்றும் லொரி ஆகியவற்றுடன் மோதியதுடன், வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த பாதசாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0