உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சட்டவிரோத மீன்பிடி தொடர்பான மோதல்; மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

முல்லைத்தீவு நந்திக்கடல் களப்புப் பகுதியில் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீராவிப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லீம் சமூகத்தவருக்கும், கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினருக்கும் இடையே சட்டவிரோத தொழிலில் ஈடுபடுதல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கடுமையான முரண்பாடாக மாறி தாக்குதலாக வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 49 வயது மதிக்கத்தக்க இரு நபர்கள் தாக்குதலுக்கு இலக்காகி படு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அத்தோடு நீராவிப்பிட்டியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மூவரை கைது செய்துள்ளதுடன் ஏனையவர்கள் தப்பித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கங்களின் மாவட்ட தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம், “நீரியல் வளத்திணைக்களம் சட்டவிரோத தொழிலை முறையாக கட்டுப்படுத்தியிருந்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது” என குற்றம் சுமத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0