உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வெளிநாடு செல்லும் பிக்குகளுக்கு புதிய நடைமுறை விரைவில்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
45 பார்வைகள்

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், அந்தந்த பீடங்களின் உயர்மட்டப் பரிந்துரைகளைப் பெறுவதைக் கட்டாயமாக்க அரசு தீர்மானித்துள்ளது.

வெளிநாடு செல்லும் பிக்குகள் தமது பிரதான தேரர்கள் (ஆச்சார்ய), பிரதேச தலைவர்கள் மற்றும் அந்தந்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

இந்த ஒழுங்குமுறையை எதிர்காலத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறையே தற்போது மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டலின் கீழ், பீடங்களின் பதிவாளர்களுடன் நடத்தப்பட்ட விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள், பிக்குகள் போன்று வேடமிட்டு நாட்டுக்குள் வருகை தந்து மதத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையை அடுத்தே இக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0