உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வழக்குத் தீர்ப்புகளை அமைச்சர்கள் தீர்மானிப்பது நீதித்துறைக்கே ஆபத்து.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட கருத்துக்கள், நீதித்துறையின் சுயாதீனத்தில் அரசு மேற்கொள்ளும் நேரடித் தலையீடு என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வவுனியாவில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ஷ, ஷஷீந்திர ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல, மேர்வின் சில்வா, பிரியங்கர ஜயரத்ன மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரின் வழக்கு விசாரணைகள் வரும் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். இவை வெறும் வழக்கு தினங்கள் மட்டுமல்ல, அவர்களின் கழுத்தில் உள்ள கயிறு இறுக்கமடையும் நாட்கள் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஒரு அமைச்சராக இருந்துகொண்டு வழக்கின் தீர்ப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் அதிகாரம் பிமல் ரத்நாயக்கவுக்குக் கிடையாது என்று திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
“வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளபோது, சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தி தீர்ப்பை வழங்க ஜனாதிபதிக்கோ அல்லது அரசுக்கோ அதிகாரம் இல்லை.

நீதிமன்றத்தால் மாத்திரமே தீர்ப்பை வழங்க முடியும் எனும் நிலையில், முன்கூட்டியே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது நீதிமன்றச் செயற்பாடுகளில் அரசு மேற்கொள்ளும் நேரடித் தலையீடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்துச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறையினருக்கு அறிவித்துவிட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காகக் காத்திருப்பதே அமைச்சர்களின் பொறுப்பு.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

38 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0