உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

இணையத்தளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போது அங்கிருந்து 35 டெக்ஸ்டொப் கணினிகள், 37 டெப் கணினிகள், 147 கைபேசிகள், 100 சிம் அட்டைகள் மற்றும் 2,100 சட்டவிரோத சிகரெட்டுகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த அனைத்து உபகரணங்களுடன் அந்த வீடு பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 37 சீனப் பிரஜைகளும் மூன்று மாத கால சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்து, இவ்வாறான சட்டவிரோதச் சேவைகளை வழங்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபர்கள் இணையத்தளம் ஊடாக சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டனரா, அல்லது ஹேக்கர்களாக செயற்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் இணையதளக் குற்றங்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த கணினிகள் மற்றும் கைபேசிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 37 சீனப் பிரஜைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

46 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

26 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

48 0 0