உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கையின் முதலாவது ஹஜ் குழு நேற்று இரவு சவூதி அரேபியா பயணம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இவ்வாண்டு (2026) புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி முதலாவது ஹஜ் குழு நேற்று 01 ஆம் திகதி இரவு 09.05 மணிக்கு விசேட சவூதி ஏயார் லைன்ஸ்  விமானம் மூலம் ஜித்தா  பயணமாகினர்.

இந்த முதலாவது ஹஜ் குழுவில் 07 ஹஜ் முகவர்கள் மூலமாக 325 பேர் பயணமாகினர்.

இவர்களை வழியனுப்பும் நிகழ்வு நேற்று 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 05 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் – கஹ்தானி, பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், அரச ஹஜ் குழுவின் தலைவர் றியாஸ் மிஹ்லார், விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவி, ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் எச்.எம். அம்ஜடீன், மற்றும் அதன் உறுப்பினர் றுஸ்தி காலித், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகளான கே. சப்றி மற்றும் அஷ்ஷெய்க் முப்தி முர்ஷி, ஹஜ் முகவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இலங்கையிலிருந்து இவ்வாண்டு 3,500 யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்காக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

45 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

25 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

42 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0