வெசாக் – தானசாலை பதிவு ஆரம்பமாகவுள்ளது.!
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளுக்கான பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவள்ளன.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகொட இதனை தெரிவித்துள்ளார்இந்த செயன்முறை நாடளாவிய ரீதியாக அலுவலக மட்டத்தில் ஆரம்பிக்கப்படும்.
தானசாலைகளை ஏற்பாடு செய்வதற்கான விஷேட வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்களை அணுகி மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகொட அறிவுறுத்தியுள்ளார்.