அவசர அம்புலன்ஸ் பணியாளர்கள் மீது தாக்குதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.!
செல்வபுரம் பகுதியில் நேற்று (01) அதிகாலை 1990 தேசிய அவசர அம்புலன்ஸ் சேவை பணியாளர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.அதிகாலை சுமார் 1 மணியளவில் மாங்குளம் பகுதிக்கு நோயாளியை ஏற்றச் செல்லும் நோக்கில் சென்ற அம்புலன்ஸ் குழுவினர், நோயாளியின் வீட்டில் இருந்தவர்களாலும் மேலும் சில நபர்களாலும் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் அம்புலன்ஸ் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளைஆரம்பித்துள்ளனர்.1990 இலக்கத்தின் கீழ் இலவச அவசர அம்புலன்ஸ் சேவை நாடு முழுவதும் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள், அவசர மருத்துவ சேவையில் ஈடுபடும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்படுத்தியுள்ளது.