கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டம்.!
இலங்கையின் அழகிய கடற்கரைப் பகுதிகளை மையமாகக் கொண்டு புதிய சுற்றுலா வலயங்களை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.இதன் முதற்கட்டமாக கொழும்பு கொள்ளுப்பிட்டி கடற்கரைப் பகுதியில் புதிய சுற்றுலா வலயம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொழும்பிலிருந்து தென்னிலங்கை வரையான கடற்கரைப் பகுதிகளிலும் மேலும் பல சுற்றுலா வலயங்கள் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த புதிய சுற்றுலா வலயங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மட்டுமன்றி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு, சேவை மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.