உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கிளிநொச்சியில் பரபரப்பு ; மே தின நிகழ்வில் இளைஞர் ஒருவரிடம் பொம்மைத் துப்பாக்கி மீட்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் அனுசரணையில் கிளிநொச்சியில் விசேட மே தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கிளிநொச்சி, பணிமனை சந்திப்பில் உள்ள பசுமைப் பூங்காவில் நடைபெறவிருந்த இந்தப் பேரணியை காணொளிப் பதிவு (Video Coverage) செய்வதற்காக இளைஞர் ஒருவர் வருகை தந்திருந்தார்.

பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்தவர்களின் உடமைகளைச் சோதனையிட்டனர். இதன்போது, குறித்த இளைஞரின் பையைச் சோதனையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பையினுள் பிளாஸ்டிக்கால் ஆன பொம்மைத் துப்பாக்கி ஒன்று இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞரை மேலதிக விசாரணைக்காக போலீசார் கிளிநொச்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் கிளிநொச்சி, விநாயகபுரம், இலக்கம் 187 ஐச் சேர்ந்த தமிழ்செல்வம் தமிழன் வயது 25 ஆம் திகதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது தந்தை வேலுசாமி தமிழ்செல்வம் ஸ்ரீதரன், தமிழரசுக் கட்சியின் தீவிர செயல்வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி: ITAK இளைஞர் பேரவையின் ஞானராஜாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே, நிகழ்வுகளைக் காணொளிப் பதிவு செய்ய இவர் அங்கு வந்துள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளைப் பதிவு செய்யும் நோக்கில் இவர் அங்கு வந்ததை ‘Live 4 Tamil’ யூடியூப் தளத்தின் உரிமையாளரும் உறுதிப்படுத்தியுள்ளார் எனினும், இந்த அசம்பாவிதச் சூழலால் குறித்த பேரணி நிகழ்வுகள் காணொளிப் பதிவு செய்யப்படவில்லை.

உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் இவ்வாறான சந்தேகத்திற்குரிய பொருட்கள் கொண்டு வரப்படுவது பாதுகாப்புத் தரப்பினரிடையே பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இது விளையாட்டுக்காக கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் கொண்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0