உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்;கொ*லையா? தற்கொ*லையா?

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை முன்னெடுப்பதற்காக சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, நான்கு சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திறைசேரியின் வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்தலின் போது, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாவது தரப்பினருக்கு கைமாறிய சம்பவம் தொடர்பாக, நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்‌ஷ உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் ரங்க ராஜபக்‌ஷ நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். அவரது சடலம் அவரது வீட்டிற்கு அருகிலேயே கண்டெடுக்கப்பட்டது. இது தற்கொலையா? அல்லது கொலையா? அல்லது விபத்தா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான நீதவான் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், மேலதிக பிரேதப் பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0