உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யர் நசீர் அவர்கள், நேற்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.


‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்காகப் பிரதமர் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.

பரஸ்பர கௌரவம், நட்பு மற்றும் பொதுவான அபிலாஷைகளின் அடிப்படையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் சுமூகமான உறவுகள் குறித்து இரு தரப்பினரும் இதன்போது நினைவுகூர்ந்தனர்.

அத்துடன் கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டு போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதும், ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும் இச்சந்திப்பின் அடிப்படை நோக்கமாக அமைந்தது.

இந்நிகழ்வில் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் சுனைரா லத்தீப், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹாவத்த மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0