உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்று சிவனாலயத்தில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு ஆன்மீக நிகழ்வுகள் இன்று 1 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நிறைவடைந்தன.

இந்நிகழ்வில் சைவ சமய வழிபாடுகள், முன்னோர்களுக்கான பிதிர் தர்ப்பணம் மற்றும் ஆன்மீக சடங்குகள் இடம்பெற்றதுடன், சித்திர குப்த நாயனார் கதை படிக்கப்பட்டு , சித்திரைகஞ்சியும் வழங்கப்பட்டது. இதில் பல பக்தர்கள் பயபக்தியுடன் கலந்துகொண்டனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

மேலும், முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெறும் வகையில் நடைபெற்ற இந்த ஆன்மீக நிகழ்வு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ஒழுங்காகவும் சிறப்பாகவும் மிகவும் அமைதியான முறையில் நிறைவு பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0