விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!
நாவலப்பிட்டி நகரத்தின் மையத்தில் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் பின்புறமாக மோதி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இன்று (01) நாவலபிட்டி நகரத்தின் மையத்தில் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டிக்கு பெருமளவிலான பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த பாரவூர்த்தியில் சிக்குண்டு, அந்த பாரவூர்த்தியின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.
இன்று (01) குருநாகலையிலிருந்து நாவலப்பிட்டியவில் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று, பிரதான சாலையிலிருந்து பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பாரவூர்தியின் பின்பகுதிக்கும் கிடங்கின் சுவருக்கும் இடையேயான குறுகிய இடைவெளியில் சிக்கி பாரவூர்தியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சுமார் 24 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது .
இந்த விபத்து குறித்து நாவலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் பாரவூர்தி ஓட்டுநர் நாவலப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ய
ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்குக் காரணம் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.