உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் மே தின வாழ்த்துச் செய்தி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

உலக உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக் குரலாக ஒலிக்கும் இந்நன்னாளான மே தினத்தில், நாட்டின் அபிவிருத்திக்காக இரவு பகலின்றி உழைக்கும் அனைத்து தொழிலாளர் சகோதரர், சகோதரிகளுக்கும் எமது இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ் வாழ்த்துச் செய்தி, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றிய தலைமை பீட குருமார்கள், ரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, பதுளை, கண்டி, மாத்தளை மாவட்ட கிளை ஒன்றிய குருமார்கள் அனைவரின் சார்பாக அன்புடன் வழங்கப்படுகிறது.

குறிப்பாக, இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் என்றென்றும் பாராட்டத்தக்கவை.

கடும் மழையையும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் உங்களின் உழைப்பிற்கு இந்நாளில் எமது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதும், சமூக வசதிகள் வலுப்படுத்தப்படுவதும் மிகவும் அவசியமானவை. அந்த நோக்கில் அரசும் சமூக அமைப்புகளும் இணைந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும்.

“போதையற்ற நாடு, ஊழலற்ற தேசம்” என்ற உயரிய இலக்கை அடைவதற்கும், ஒழுக்கமிக்க மற்றும் வளமான சமூகத்தை உருவாக்குவதற்கும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

உழைப்பாளர்களின் சக்தியே தேசத்தின் முன்னேற்றத்தின் அடித்தளம். உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, கௌரவமான வாழ்க்கை நிலை உறுதி செய்யப்படும் சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

40 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0