உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பெருமளவான பீடி இலைகள் கைப்பற்றல்; பத்து பேர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

சிலாபம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 2,000 கிலோ கிராமிற்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 04 இந்தியப் பிரஜைகள் உட்பட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதி சிலாபம் கடற்பரப்பில் விசேட தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக் கப்பல் ஒன்று, இந்தியப் படகு ஒன்றிலிருந்து மூன்று உள்நாட்டு டிங்கி படகுகளுக்குச் சந்தேகத்திற்கிடமான பொதிகளை மாற்றிக்கொண்டிருந்ததைக் அவதானித்தது.

கடற்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது, 54 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்த 2,000 கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இந்தியப் படகுடன் 04 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

இதனைப் பொறுப்பேற்க வந்த 03 உள்நாட்டு டிங்கி படகுகளும் 06 இலங்கையர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்திய சந்தேகநபர்கள் 18 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், படகுகள் மற்றும் சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்கத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

40 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0