உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டும் அதேவேளை எமது கோரிக்கைகளுக்கும் செவிசாயுங்கள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
44 பார்வைகள்

மே தினத்தை முன்னிட்டு, இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (HNDA) பட்டதாரிகள் தங்களது தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், நீண்டகாலமாக நிலவி வரும் தொழில்முறை அங்கீகாரக் குறைபாடு, சம்பள அநீதி மற்றும் சேவை அமைப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து தீவிர கவலை வெளியிடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் கருத்து தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், கணக்கியல் துறையில் பணியாற்ற தேவையான முழுமையான தகுதிகள் இருந்தும், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் அரச துறைகளில் உரிய அங்கீகாரம் பெறாமல் பின்தள்ளப்படுவதாக குற்றம் சாட்டினர். குறிப்பாக, பட்டப்படிப்பு தகுதியுடன் இணையான நிலை வழங்கப்படாதது காரணமாக பதவி உயர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தொழிற்சங்கங்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழிகளை இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கான தனித்த சேவை அமைப்பை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் பலமுறை அறிவிக்கப்பட்டும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சம்பள கட்டமைப்பில் நிலவும் வேறுபாடுகளும் இச்சந்திப்பில் முக்கியமாக முன்வைக்கப்பட்டன. ஒரே பணியை மேற்கொள்ளும் பட்டப்படிப்பு தகுதியாளர்களுடன் ஒப்பிடும்போது உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் குறைந்த சம்பளம் பெறுகின்றனர் என்பதுடன், சேவை அனுபவம் அதிகரித்தாலும் அதற்கேற்ற சம்பள உயர்வுகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்கால தேவைகள் தொடர்பாக பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா தகுதியை பட்டப்படிப்பிற்கு இணையானதாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தல், தனித்த சேவைப் பிரிவை உடனடியாக அமல்படுத்தல், சமச்சீர் சம்பள கட்டமைப்பை உறுதி செய்தல், பதவி உயர்வுகளில் சம வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் மேலதிக கல்வி மற்றும் தொழில்முறை முன்னேற்ற வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்குகின்றன.

அரசுக்கு மூன்று ஆண்டுகள் காலம் கொடுத்துள்ளோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கடந்த காலத்தில் போராடியது போல போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என இந்த தொழிற்சங்கம் எச்சரித்துள்ளன.

இதன்போது மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களுக்கு மௌன பிரார்த்தனை செய்யப்பட்டது.

மே தினத்தின் பின்னணியில் வெளிப்பட்ட இந்தக் கோரிக்கைகள், நாட்டின் தொழிலாளர் உரிமைகள் மற்றும் கல்வித் தகுதிகளின் மதிப்பீடு குறித்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

40 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0