போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது.!
மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவின் ரன்முத்து செவன பகுதியில் பாரியளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (30) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 33 கிராம் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 17 கிராம் 570 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 135,500 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மாதம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.