உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மக்கள் சக்தியாக ஒன்றிணையுங்கள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையின் உழைக்கும் மக்கள், நாடு பொருளாதார ரீதியாகப் பல வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் ஒரு தீர்மானமிக்க தருணத்தில் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மே தினச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“2025 ஆம் ஆண்டில், 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக்குறைந்த வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியுள்ளதுடன், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் அதிகூடிய அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

8பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி வருமானம் 17 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது.

அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, ‘டித்வா’ சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், நாட்டின் அணிசேரா வெளியுறவுக் கொள்கை மூலம் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

2016 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் பணியில் இணைந்த அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதிய உரிமை வழங்கப்பட்டுள்ளது.

‘மஹபொல’ புலமைப்பரிசில் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாற்றில் அதிகூடிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

டிஜிட்டல் பொருளாதாரம், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ மற்றும் ‘சமூக சக்தி’ போன்ற திட்டங்கள் மூலம் மனித வளத்தையும் உற்பத்தியையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் கூட்டு முயற்சியில், நாட்டின் முதன்மை சக்தியான உழைக்கும் மக்கள் மனசாட்சிக்கு இணங்க இணைய வேண்டும்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

40 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0