உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

25 இலட்சம் டொலர் மோசடி; வரமுடியாது என அறிவித்த திறைசேரி செயலாளர் விசாரணைக்கு ஆஜர்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

திறைசேரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய 25 இ-லட்சம் அமெரிக்க டொலர் கடன் தவணைப் பணம், மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்காகத் திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நேற்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.

திறைசேரியால் மேற்கொள்ளப்படவிருந்த 25 இலட்சம் அமெரிக்க டொலர் அளவிலான வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு, உரிய தரப்புக்குச் செல்லாமல் சந்தேகத்துக்கிடமான முறையில் வேறொரு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றுள்ளது.

இதுவொரு பாரிய சைபர் தாக்குதலாக இருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விளமளிப்பதற்காகவே நிதி அமைச்சின் செயலாளர் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் (கோப் குழு) அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் விடுத்த அழைப்பை ஏற்று நேற்று குழுவின் முன் சமூகமளிக்க முடியாது எனத் திறைசேரி செயலாளர் உத்தியோகபூர்வமாகக் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரத்தின் தீவிரம் மற்றும் அழுத்தம் காரணமாக, அவர் நேற்று மதியம் 1.00 மணிக்கு நிதிக்குழுவின் முன் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார்.

இந்த நிதி மோசடியானது கடந்த நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

40 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0